July 9, 2020

செங்குன்றத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரால், வீட்டில் முடங்கி வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பொது மக்கள் யாரும் வேலைகளுக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து பசியால் பரிதவித்து வருவதால், அவர்களுக்கு உதவும் வகையில் திமுகவினர் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு மு. க. ஸ்டாலின் அவர்கள் அறுவுறுத்தி இருந்தார்.

இதில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி. சா. மு நாசர். நகர செயலாளர் ராஜேந்திரன். பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் இரா. பாபு. பொது குழ உறுப்பினர் ஜெய்மதன். உள்ளிட்டோர் அந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.