July 9, 2020

திருவள்ளுரில், வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கினார்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் படி திருவள்ளூர் தெற்கு மாவட்ட, திருவள்ளூர் தொகுதி பூண்டி கைவண்டூர் பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதரம் இழந்த எழை, எளிய குடும்பங்களுக்கும் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஏற்பாட்டில், உதவி பொருட்களை மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கினார்கள்.அப்போது மாவட்ட துணை செயலாளர் கே. ஜெ. ரமேஷ், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கிறிஸ்டி (எ)அன்பரசு, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கத்தில், ஊரடங்கு உத்தரவால் செயல்படாமல் இருந்த வேளாண் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் திறக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில், மீண்டும் செயல்படுவதை ஆய்வு மேற்கொண்டு அங்கு பணிபுரியும் விவசாயிகளுக்கு முககவசம் மற்றும் செனிடைசர்கள் வழங்கினார். அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், திருவள்ளூர் நகர கழக செயலாளர் சி.சு. ரவிச்சந்திரன், பேரப்பாக்கம் ஊராட்சி செயலாளர் கண்ணதாசன் உள்பட பலர் உள்ளனர். . – செய்தியாளர் ; A. மகேஷ்