July 9, 2020

மறைந்த, பத்திரிகையாளர் சங்க தலைவர் D.S.ரவீந்தரதாஸ் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் நிகழ்வுகள் நடத்தபட்டது..

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனரும், முன்னாள் மாநில தலைைவரும், அகில இந்திய பத்திகையாளர் சங்கத்தின் துணை தலைவராகவும் இருந்து பணியாற்றிய, பத்திரிகையாளர்களின் போராளி, மறைந்த அய்யா, D.S.ரவீந்தரதாஸ் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கொரோனாவின் பாதிப்பால், மிகவும் எளிமையாக தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அதில் அவர் படத்திற்க்கு மாநில தலைவர் D.S.R.சுபாஷ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அய்யாவின் மனைவியார், சசிகலா ரவீந்தரதாஸ், மாநில நிர்வாகிகள், கழுகு ராஜேந்திரன், போரூர் ஜானா ஆகியோர் உடன் இருந்தனர்.

அதே போல் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் அவர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு அவருடைய படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருவள்ளுர், கோவை, சேலம், விழுப்புரம், கடலூர், உட்பட அனைத்து மாவட்டங்களிலும், நிகழ்வுகளை நடத்தி அவர் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..