திருவள்ளுர் மாவட்டத்தில், கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்த முன் மாதிரியான ஊராட்சி மன்ற தலைவர்…
1 min readதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 48 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா நோயால் இறந்து விட்டார். அவருடைய உடலை அடக்கம் செய்ய, அவருடைய உறவினர்கள் யாரும் முன் வரவில்லை. இறந்தவர் வீட்டிலிருந்து 2 பெண்கள் மட்டும் தான் இடுகாட்டுக்கு வந்திருந்தனர்.
இது குறித்து, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நடராஜனிடம் நாம் கேட்ட போது, நான் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கொரோனா வந்த ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று அவர்களுக்கு ஆறுதல் சொல்வதும், தைரியம் ஏற்படுத்தியும் ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு அரிசி, மளிகை சாமான் ,காய்கறிகள் போன்றவை வாங்கி அவர்களிடம் நேரடியாக சென்று கொடுத்து அவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்து வந்திருக்கின்றோம்.
இது போன்று கொரோனாவல் இறந்தவர்களின் உறவினர்களும் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத நிலையில் அந்த குடும்பத்தினர்களுக்கு ஆதரவாக நின்று இறுதி சடங்குகளையும் செய்கின்றோம், என பொறுப்புனர்வுடன் பேசினார்..