Mon. Sep 28th, 2020

மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில் சிறப்பாக நடத்தப்படும் கொரோனா தடுப்பு பணிகள்..

1 min read

திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், கொரோனாவின் பாதிப்பு துவங்கியதால், அந்த ஊராட்சியை கொரோனாவின் பிடியில் இருந்து மீட்க வேண்டி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மீஞ்சூர் வட்டார சுகாதார தலைமை மருத்துவர் ராஜேஷ் ஆகியோரிடம் ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணிஅப்பாவு கோரிக்கை வைத்தார்.

அதை தொடர்ந்து, ஊராட்சி முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் முதல் கட்டமாக முடுக்கிவிடப்பட்டது. பின்னர் ஊராட்சியில் அடங்கிய அனுப்பம்பட்டு, பெரிய அனுப்பம்பட்டு, உதண்டிகண்டிகை, ஆகிய மூன்று பகுதிகளில் உடனடியாக, சிறப்பு முகாம் நடத்த தலைமை மருத்துவர் ராஜேஷ் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அந்த முகாமில், பொது மருத்துவம், மற்றும் உடல் வெப்ப பரிசோதனைகள், கொரோனா குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் மருத்துவர்கள் வழங்கினர். ஊராட்சி முழுவதும் மீஞ்சூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள், வீடு,வீடாக சென்று பரிசோதனைகள் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *