July 9, 2020

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துகோட்டை பேரூராட்சியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…

திருவள்ளுர் மாவட்டம் ஊத்துகோட்டை பேரூராட்சியில் கொரோனா தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி, ஊத்துகோட்டை பேரூராட்சி மற்றும் அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கினர். பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

மேலும் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பேரூராட்சியில் உள்ள பஜார் வீதிகள் மற்றும் தெருக்களில் சென்று விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், ஊத்துகோட்டை போலிஸ் சரக துணை கண்காணிப்பாளர் சந்திரஹாசன் மற்றும் ஊத்துகோட்டை வியபாரிகள் சங்கதலைவர் நடராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சூல்தான், மேலும் நிர்வாகிகள் பாஸ்கரன், கங்காதரன் மற்றும் பலர் காலந்து கொண்டனர்..