திருவள்ளுர் மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது…
1 min readகொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் ஆட்சி மொழி, மற்றும் கலை பண்பாட்டு, தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
திருவள்ளுர் மாவட்டத்தில், தாலுகா அளவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாக சென்று கொரோனா தொற்றின் மாதிரி சேகரிப்பு செய்யும், நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஷ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவருடன், திருத்தணி எம்.எல்.ஏ நரசிம்மன், கும்முடிபூண்டி எம்.எல்.ஏ விஜயக்குமார், மற்றும் பல துறைகளின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.