உலக அளவில், கொரோனாவிற்க்கு, தடுப்பு மருந்தை கண்டுபித்துள்ள, தமிழ்நாட்டை சேர்ந்த முனைவர்…
1 min readஇந்தியாவில் தயாாரிக்கபட்டுள்ள, கொரோனாவின் முதல் தடுப்பூசி “கோவேக்சின்” இதை கண்டு பிடித்தவர், முனைவர், “கிருஷ்ணனா எல்லா” இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அதிலும் நம் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி, நெமிலி கிராமத்தை சேர்ந்தவர். இவர் நடுத்தரமான ஒரு விவசாயின் மகன்.
சிகா வைரஸ்ஸுக்கு எதிரான விலை குறைந்த தடுப்பூசியைக் கண்டுபிடித்தவரும் இவரே! சிகா வைரசுக்கு உலக அளவில் இருந்த பல நிறுவனங்கள் ஒரு மருந்து 30 முதல் 40 டாலர் வரை விலை நிர்ணயித்த நிலையில், இவர் அந்த மருந்தை 1 டாலருக்கு விற்பனைக்கு கொண்டுவந்து சாதனை படைத்தார்.
இவர் ஒரு ரோட்டரி திட்டத்தின் உதவியில்
அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்று படித்தார். பின் 1995ல் படிப்பை முடித்து விட்டு
அங்கேயே தங்கிவிட இருந்தவரை, தாய் நாடு திரும்பி வந்து நமது நாட்டிலேயே பணி செய்யுமாறு அவருடைய தாயார் அன்பு கட்டளையிட்டதால், அவர் இந்தியாவிற்க்கு திரும்பினார்.
அதே, சாதனையாளர் முனைவர்,கிருஷ்ணா எல்லாவின், பாரத் பயோடெக் நிறுவனம் தான், இப்போது உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் கொரானாவிற்க்கும் மருந்து கண்டுபிடித்து உள்ளது. தற்போது
இரண்டாவது கட்டமான மனிதப் பரிசோதனைக்குத் தயார் நிலையில் இருப்பதாக நமது, ஐ.சி.எம்.ஆர் அண்மையில் அறிவித்தது. அதன்படி, தேசிய மருந்தக ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.
இந்தியாவில் முற்றிலும் தயாரான முதல் உள்நாட்டுத் தடுப்பூசி. இதுவே, இது அரசின் தற்போதைய தலையாயப் பணியாக உள்ளது. மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இதைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர். என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசி மருந்தின் மனிதப் பரிசோதனை இம்மாதம் ஜுலை 7 தொடங்கி, அதில் திருப்திகரமான முடிவுகள் வந்த பின்னரே, இதற்கு உரிய அனுமதி வழங்கப்படும்.
மனிதப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டால், வரும் ஆகஸ்ட் 15, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்படும். பாரத் பயோடெக் இந்தத் தேதியை மனதில் கொண்டு வேகமாக செயல்பட்டு வருகிறது. எனினும் மனிதப் பரிசோதனையில் ஈடுபடும் அனைவரின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இதன் முடிவுகள் அமையும். என ஐசிஎம்ஆர் இயக்குனர் தடுப்பூசியை அனுப்பிவைத்த மருத்துவமனைகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைக்கு உட் படுத்தப்படும் இந்தியாவின் 12 மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்கள்… விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவா ஆகியவை ஆகும்.
நமது, கிருஷ்ணா எல்லா அவர்களுக்கும், அவர் நிறுவனத்திற்க்கும் ஒரு சிறப்பு என்னவென்றால், உலக அளவில், கொரோனாவிற்க்கு மருந்து கண்டுபிடித்த நிறுவனங்கள் எண்ணிக்கை 140 அதில், மனிதர்களுக்கு பரிசோதிக்க ஏற்று கொள்ளபட்டவை வெறும் 16 தான், அதில் சீனா 4கும், அமேரிக்கா 3ம், இங்கிலாந்து 2ம், ரஷ்யா,ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் தலா ஒரு நிறுவனங்களும் தேர்வாகி உள்ள நிலையில், இதில் போட்டியிடும் ஒரே இந்திய நிறுவனம் நமது பாரத் பயோடெக் என்பது தான் நமது பெருமை,
சிகா வைரஸ் தொற்றில் மிக குறைந்த விலையில் மருந்தை மக்களுக்கு கொடுத்த நம் நாட்டின் சாதனையாளர், “முனைவர், கிருஷ்ணா எல்லா” அவர்களும், அவருடைய பாரத் பயோ டெக் நிறுவனமும் இதில் வெற்றி பெற நாம் வேண்டிகொண்டு, வாழ்த்துவோம்…
- G.பாலகிருஷ்ணன் &
செய்தியாளர் – மகேஷ்
தொடர்புக்கு, 8939476777