திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர், வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க பொது மக்கள் எதிர்பார்ப்பு…
1 min read
திருவள்ளுர் மாவட்டத்தில், பொது துறை வங்கிகள் தாலுகா, நகரம் என்று மட்டும் இல்லாமல் ஊராட்சி அளவிலும் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. மத்திய அரசும் பொது மக்கள் அனைவரும் வங்கி கணக்கு கட்டாயம் துவங்க வேண்டும் என்று உத்தவிட்டது மட்டும் இல்லாமல், அரசு நலதிட்டங்கள் துவங்கி முதியோர் உதவி தொகைகள் வரை அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கியின் மூலம் தான் நடத்தபட வேண்டும் என்று உறுதியாக கூறி அதையே செயல்படுத்தியும் வருகின்றன. இதில் மகிழ்ச்சிபட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், ஊராட்சி அளவில் கிராமபுறங்களில் உள்ள மக்கள் அனைத்து 100 நாள் ஊதியம் உட்பட, முதியோர் உதவித் தொகை வரை அனைத்தும் நேரடியாக கிராமங்களுக்கே நேரடியாக சென்று மக்களுக்கு வழங்கி சேவை செய்ய வங்கிகள் ஊராட்சிக்கு ஒரு உதவியாளரை நிறுவி அதை செயல்படுத்தி வருகின்றன.
இதில், தற்போது பிரட்சனை என்னவென்றால், கொரோனா தொற்று காரணமாக பல வங்கிகள் தங்கள் ஊழியர்களை பாதுகாப்பதற்காக, ஊராட்சியில் சென்று சேவை செய்யவேண்டிய ஊழியர்களை வங்கிக்கு வரவழைத்து அவர்கள் முன் நிறுத்தி பணி செய்யவிட்டு இவர்கள் பாதுகாப்பாக செயல்படுகின்றனர். இதனால் 100 நாள் சம்பளம் உட்பட முதியோர் தொகை வாங்கும் முதியவர்கள் கூட வங்கியில் வந்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு கூட்டம் அதிகம் சேருவதால், சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் தினறுகின்றனர்.
இந்த நிலையில் அதிக கூட்டம் கூடியதால் தான் இன்று பொன்னேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மற்றும் பள்ளிபட்டில் நகிரி ரோட்டில் செயல்படும் இந்தியன் வங்கி, போன்ற வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு, இன்று வங்கிகள் மூடி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊராட்சியில் சேவை செய்யவேண்டிய ஊழியர்கள் கிராமபுறங்களுக்கு நேரடியாக சென்று பணியாற்ற உத்தரவிடுமாறு கிராம புறமக்கள் எதிர் பார்க்கின்றனர்…
செய்தியாளர்கள் – அபுபக்கர், மகேஷ்,
தொடர்புக்கு – 8939476777