கும்முடிபூண்டி ஒன்றிய துணைதலைவராக இருப்பவர் குணசேகரன், சென்றமாதம் 15 ம்தேதி இவருடைய பிறந்தநாள் ஆகும், அதற்காக அவர் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் தனது பிறந்தநாள் நிகழ்ச்சியை விமர்சியாக கொண்டாட முடிவு செய்து, தனக்கு சொந்தமாக ஆரம்பாக்கத்தில் இருக்கும் மாந்தோப்பில் பிறந்தநாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொண்ட்டடினார். அதில் அவர் கேக் வெட்டியும், வந்திருந்தவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தும் தடபுடலாக கொண்டாடினர். அதில் விருப்பபட்டு பல பிரமுகர்களும், சூழ்நிலையால் சில அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிலையில் சில நாட்கள் கழித்து குணசேகரன் கொரோனா தொற்றால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். இதை கேள்விபட்டதும் அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறி வந்தநிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கும்முடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால், குணசேகரனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் அதிர்ச்சியில் உள்ளனர்…