சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஆங்காடு ஊராட்சியில், சுடுகாட்டிற்க்கு சுற்று சுவர் அமைத்து தரவேண்டி அப்பகுதி மக்கள் சார்பில், சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன், மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனத்திடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆங்காடு பகுதி சுடுகாட்டிற்க்கு சுற்று சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதில் கட்டப்படும், சுற்று சுவர் அமைக்கும் பணிகளை ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் பார்வையிட்டார். அப்போது அவருடன் அந்த ஊராட்சியின் செயலாளர், கோதண்டம், ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தானர். செய்தியாளர் – மீஞ்சூர் அபுபக்கர் நிழல்.இன் – 8939476777