December 1, 2020

திருவள்ளுர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர், ஆவடி சாமு நாசர் தலைமையில் திமுக மாணவரணி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடல் நடைபெற்றது…

1 min read
திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர பேரூர் கழக மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் (Zoom வீடியோ கான்பிரன்ஸ்கால் வாயிலாக) திருவள்ளூர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர் ஆவடி சா.மு‌.நாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், திமுக மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு முன்னிலையிலும், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் டி.கே.பாபு ஏற்பாட்டிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள்,
துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், திருவள்ளுர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், கடம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட ஒன்றிய, நகர, மாணவரணி நிர்வாகிகளுடன் அவர்களுடைய பகுதி கொரோனா பதிப்புகள் நிலவரங்கள் குறித்து வெகுநேரம் கலந்துரையாடல் நடத்தபட்டது.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *