செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி, பவானி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கசாயம் வழங்கபட்டது…
1 min readநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டி கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தபட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, இருதயராஜ், ஜான் ஆகியோர் தலைமை தாங்கினர். பி.என்.கே. கிருஷ்ணன், எஸ்.ஜோசப், பொன்.தாமரை கண்ணன், மாரியப்பன், 14வது வார்டு உறுப்பினர் கே.ராஜவேலு, அசோகன், பி.சேகர், ஆல்பர்ட், என்.வி. வெங்கடேசன், ஆனந்த், முத்து மீரான், தாமஸ், சூசை, ஏ.ஜோசப், எஸ்.ஏ. ஜோசப், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் வரவேற்புரையாற்றினார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அந்த கசாயத்தில்,
எலுமிச்சை, இஞ்சி, மஞ்சள், கல் உப்பு, மிளகு சேர்த்து தயாரிக்கபட்டு அப்பகுதி மக்களுக்கு (ஜூஸ்) தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக எலைட் பள்ளிக் குழும முதன்மை நிர்வாக அதிகாரி பால் செபாஸ்டின், பீலிக்கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு கையாள்வது என்றும், நாம், அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு காய்கறிகளில் உள்ள நன்மைகள் பற்றியும், உரையாற்றினர்.
மேலும், அந்துவான், அம்மன் சேகர், ஜூலியன், பவானி சதீஷ், ரோஸ்லின், முருகன், செய்யது மசூது மற்றும் ஊர் பொதுமக்கள், பெரியவர்கள் பலர் இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டனர்.
செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777