கொரோனா தொற்று பரவலால், அரசு ஊரடங்கு நடைமுறை நிலையில், மக்கள் தொழில்கள் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், பல்வேறு தரப்பு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததையடுத்து, திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தொகுதிக்கு உட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, நரிக்குறவர்கள் உள்பட, 1000 ஏழை, எளிய குடும்பங்களுக்கு பூவிருந்தவல்லி திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஏற்பாட்டில், அரிசி, மற்றும் காய்கறி, பால், முட்டை, சமையல் எண்ணெய், முககவசம், உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, திமுக ஒன்றிய கழக செயலாளர் ஆ.சக்திவேல் தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கழக நிர்வாகிகள் டி.பாஸ்கர், வெங்கல் ஜி.பாஸ்கர், டி.முரளி, டி.கே.முனிவேல், வி.ஜெ.சீனிவாசன், கோடுவேளி எம்.குமார், ஜி.சம்பத், ஏ.வி.என்.வெங்கடேசன், முருகன், பிரபு, ஆர்.லோகநாதன், பி.சீனிவாசன், எம்.கணேசன், துரைகண்ணு, டி.என்.முனிவேல், ஜெ.அனந்தன், சி.தாஸ், அழகேசன், மதிவாணன், செல்வம், முனுசாமி, ராஜேந்திரன், சம்பத் உள்பட மேலும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.