Mon. Sep 28th, 2020

திருவள்ளுர் மாவட்டம், பூச்சி அத்திபேடு அருகே, மின்சார கம்பி அறுந்து விழுந்து, இளைஞர் உயிரிழந்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பூச்சிஅத்திப்பேடு அடுத்த ஆயிலச்சேரி ஊராட்சி, பட்டாபி நகரை சேர்ந்தவர் அஜீத் (24) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. (வருகின்ற ஞாயறு அன்று முதல் பிறந்தநாளை கொண்டி மகிழ இருந்தனர்) இந்நிலையில் அஜித் இன்று காலை வழக்கம் போல் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊருக்கு வெளியில் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற பாதையில், மின் கம்பம் இல்லாததால், உயர் மின் அழுத்தம் கொண்ட மின்சார கம்பி தாழ்வாக இருந்தது. அதனால் அப்பகுதி மக்கள் தற்காலிகமாக, ஒரு சவுக்கை கொம்பில் கட்டை கட்டி, முட்டு கொடுத்து வைத்திருந்தனர். இந்நிலையில், இன்று அஜித் அவ்வழியை கடந்து செல்லும் போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து அஜித் மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் அஜீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே, தங்களது கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டி, விபத்து நடந்த பகுதியை முற்றுகையிட்டு இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *