இன்று, கல்வி கண் திறந்த கர்ம வீரர் பெருந்தலைவர் பாரத ரத்னா காமராசர் அவர்களின் 118 – வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அவருடைய திருவுருவ படத்திற்கு திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிட பக்தன், திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கே. அரிகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் ஐ. ஏ.மகிமை தாஸ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் – மகேஷ் நிழல்.இன் – 8939476777
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி நகராட்சி பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில்- அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் நா. வினோத் அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருத்தணி நகராட்சி அருகிலுள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கு மற்றும் திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெரு அமைந்து உள்ள மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் சிலைக்கு முழு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் ஏ. பி.ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். அறக்கட்டளையின் பொருளாளர் வி.முருகன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள், பொதுமக்களுக்கு 100 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் துணைத்தலைவர் மு.ராஜசேகர், பி.சுப்பிரமணி அமைப்பாளர் ஏ.பி.ஆர்.பாலாஜி இணைச் செயலாளர் ஆர்.ஞானசேகரன் ஒருங்கிணைப்பாளர் சி.ஜெயின் ரோஸ் துணைச் செயலாளர் டி.செந்தில் இளைஞர் அணி செயலாளர் ஆர்.வசந்தகுமார் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் வி.முனுசாமி ஜி. காசிராஜா, இளைஞரணி மு.லோகேஷ், மாணவரணி பி. பிரித்திவிராஜ், உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.