திருவள்ளுர் மாவட்டம் முழுவதும், பள்ளி மாணவ, மணவிகளுக்கு முதல்வர் அறிவித்த, உணவு பொருட்கள் வழங்கபட்டது.
1 min readதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் துவக்கிய சத்துணவுத் திட்டத்தின் கீழ் பலன் அடைந்து வரும் மாணவ மாணவிகள் குரோனா தொற்றின் பாதிப்பால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அவர்களுக்கு தமிழகம் முழுவதுமுள்ள 23 ஆயிரத்து மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளிலும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும் பயில கூடிய ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாணவ, மாணவிகளுக்கு உணவு பொருள் வழங்கும் திட்டம் ஒன்றை துவங்கியுள்ளார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன
இந்தத் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அனுப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரிசியும், துவரம் பருப்பும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் உமாமகேஸ்வரன் தலைமை ஆசிரியர் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொருட்களை வழங்கினார்.
செய்தியாளர் – அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
செய்தியாளர் – மகேஷ்
நிழல் – இன் – 8939476777
பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் உள்ள
அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு
3கிலோஅரிசியும்
1கிலோபருப்பும் தமிழக அரசு
மூலமாக நேற்று காலை 11மணிக்கு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை சரசு தலைமையில்
ஊராட்சிமன்றதலைவர் தில்லைகுமார்
ஊராட்சிமன்ற துணை தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
செய்தியாளர் -மகேஷ்
நிழல்.இன் – 8939476777