ஆர்பிஐ அறிவிப்பை மீறி கடன் தவணை கேட்டு நெருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்
1 min read

பல தனியார் நிதிநிறுவனங்கள் மகளிர் குழுக்களிடம் கொடுத்த கடனை சில நாட்களாக வசூலிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஜூலை மாதம் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், ‘மார்ச், ஏப்ரல் மற்றும் மே, ஜீன் மாதங்களுக்கான தவணை தொகைகளுடன் ஜூலை மாதத்திற்கான தவணைத் தொகையும் ஒரே தவணையில் கட்டினால் வட்டி இல்லை. அவ்வாறு கட்டவில்லை என்றால் தவணைகள் முடிந்த கடைசி மாதத்திற்கு அடுத்த மாதம் ஊரடங்கு காலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கான தவணைத் தொகையை அபராத வட்டியுடன் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் இப்போதே மாதத்திற்கான தவணைகளை செலுத்துவது நல்லது’ என மறைமுகமாக மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், மாநில அரசு தலையிட்டு, ஏற்கனவே கொரானாவின் பிடியில் சிக்கி தவிக்கும் மக்களை, வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் மேலும் கழுத்தை நெறுக்குவதை போல் தற்போது அடாவடிதனம் செய்வதில் இருந்து காத்திட வேண்டுமென, மக்கள் எதிர்பார்கின்றனர்.
G. பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777
