Mon. Sep 28th, 2020

ஊத்துகோட்டை டி.எஸ்.பி, ஊராட்சிமன்ற தலைவர்களுடன் விழிப்புணர்வு கலந்துரையாடல்…

1 min read
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக, நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வது குறித்தும், குற்ற நடவடிக்கைகளை தடுப்பது குறித்தும், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் மற்றும் கலந்துரையாடல் பெரியபாளையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமை தாங்கினார். பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் குற்ற நடவடிக்கையை தடுக்க மூன்றாம் கண் என்று போலீசாரால் கூறப்படும் சிசிடிவி கேமராவை ஊராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் அமைக்க வேண்டும். இதன் கட்டுப்பாட்டு கருவியை ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் வைத்திருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத ஆள் புதியதாக ஊருக்குள் வந்தால் அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக எல்லாபுரம் ஒன்றியத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கும், காவல்துறைக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்களும், துணை தலைவர்களும், வார்டு உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அதற்கு பொதுமக்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். தனித்திரு! விழித்திரு! வீட்டில் இரு! அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். என்பது உள்ளிட்டவைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் கூறினார்.
முன்னதாக ஊராட்சிமன்ற தலைவர்கள் பலர் தங்கள் பகுதியில் செய்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கூறினர். குறிப்பாக திருகண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் மதன் பேசுகையில், எங்கள் ஊராட்சியில் ஏற்கனவே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது எனவும், அதன் மூலம் திருட்டு சம்பவம் ஒன்றில் துப்பு கண்டுபிடிக்கப்பட்டும் உள்ளது. எங்கள் பகுதியில் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. எனவும், காய்கறிகள் வ வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் வியபாரிகளுக்கு போலிசார் உதவ வேண்டும் எனவும், தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும், எனவும் பேசினார்.
செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *