Fri. Sep 25th, 2020

திருவள்ளூரில், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் +2 பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்…

1 min read
திருவள்ளுரில் இயங்கி வரும் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் இந்தாண்டு நடந்த மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத்தேர்வு எழுதிய 404 மாணவ மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். அந்த மாணவர்களில் ஹேமபூஜா என்ற மாணவி 600 க்கு 597 மதிப்பெண்களுடன் பள்ளியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விவரம், தமிழ் – 99 ஆங்கிலம் – 99 பொருளியல் – 100 வணிகவியல் – 100 கணக்கியல் – 100 வணிக கணக்கு – 99. விஜய்தர்ஷின் என்ற மாணவர் 596 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியளவில், 2 ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிபெண்கள் விவரம், தமிழ் – 99 ஆங்கிலம் – 98 பொருளியல் – 100 வணிகவியல்- 100 கணக்கியல் -100 வணிக கணக்கு – 99. சூர்யா என்ற மாணவர் 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் மதிபெண் விவரம், வணிகவியல் – 100, கணக்கியல் – 100, வணிக கணக்கு – 100, பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் கணினி அறிவியலில் 17 மாணவர்களும், கணிதவியலில் 1 மாணவரும், பொருளியலில் 5 மாணவர்களும், வணிகவியலில் 10 மாணவர்களும், கணக்கியலில் 14 மாணவர்களும், வணிக கணக்கில் 1 மாணவரும், கணினி பயன்பாட்டில் 2 மாணவர்களும் என மொத்த 50 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண்களை பெற்றுத்தந்து திருவள்ளூர் நகருக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் இதற்கு காரணமான ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் ப.விஷ்ணு சரண், இயக்குனர் பரணிதரன், துணை முதல்வர் கவிதா கந்தசாமி ஆகியோர் வாழ்த்தி இனிப்பு வழங்கினார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *