Mon. Sep 28th, 2020

பெரியப்பாளையம் கோயிலுக்கு, வந்த பக்தர்களை தடுத்து போலிசார் அறிவுரை, வாகனங்கள் பறிமுதல்…

1 min read
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள, பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில், ஆடி மாத திருவிழா ஆண்டு தோறும் 15 வாரத்திற்க்கு தொடர்ந்து மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாடு முழுதும் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ள நிலையில், தற்போது ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால், சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே பவானியம்மன் கோயிலுக்கு வர துவங்கினர். அதிலும் பெண்கள் புனித நீராடி கையில் வேப்பிலை ஏந்தி கோயிலுக்கு நடந்து பாதயாத்திரியாக வருவது வழக்கம், அதே போல் இன்றும், பக்தர்கள் பலர் பாதயாத்திரையாகவும், ஆட்டோ, மற்றும் வேன்களிலும் அதிக அளவில் வந்தனர்.
அவர்கள் அனைவரும்,
பெரியபாளையம் அடுத்த வடமதுரை கூட்டுச் சாலையில், ஊத்துக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர்
சந்திரஹாசன் தலைமையில் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப் இன்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் பாதயாத்திரையாக வந்த பக்தர்களையும், வாகனங்களில் வந்த பக்தர்களையும் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி திருப்பி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஆட்டோக்கள் மூலம் வந்த பக்தர்கள் இறக்கிவிடப்பட்டு உத்தரவுகளை மீறிய வாகனங்கள் மீது வழக்கு பதிந்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *