கும்முடிபூண்டி, மாதர்பாக்கம் பகுதியில், இரண்டு இடங்களில் நகை,பணம், மோட்டார் சைக்கிள், திருடு போனது…
1 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய பொம்மாஜிகுளம் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி ராஜசேகர் (30) மற்றும் அவரின் தந்தை மஸ்தான் (51) இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, வீட்டின் உள் புகுந்த மர்ம நபர்கள் 2.1/2 சவரன் தங்க நகை,1/2 கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
மேலும் அதே பகுதியில் வசிக்கும் விக்கிரமாதித்தன் (40) என்பவரது வீட்டின் வெளியில் நிறுத்தி வைக்கபட்டு இருந்த இருசக்கரவாகனம் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயவியல் துறையினர் தடையங்களை சேகரித்த நிலையில் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி – செய்தியாளர் சீனிவாசன்,
நிழல்.இன் – 8939476777
