திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர் ஒன்றிய கிழ் நல்லாத்தூர் பல்லவன் நகரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் ஹேமபூஜா திருவள்ளுரில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். அவர், இந்த ஆண்டு நடந்த மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில், 600க்கு597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில், திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து ஊக்கத் தொகையாக 10,000 ரூபாய் வழங்கினார். அப்போது அவருடன், மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் எல்லப்பன், டி.வி.முருகன், மோகனசுந்தரம், ஆர்.பகவதிராஜன், ஜெ. பாண்டுரங்கன், கொப்பூர் திலீப், பொண்ணு ரங்கன், என்.ராஜேந்திரன், மற்றும் பலர் சென்றிருந்தனர்.