மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. அதற்கு ஒன்றிய பெருந்தலைவர் ரவி தலைமை வகித்தார். மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் நடராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முக்கியமாக கிராமங்களில் கொரானா தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், குடிநீர், சாலைவசதிகள், குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும் ஒன்றியங்களில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களான பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தவும், புதிய இடங்களில் ரேஷன் கடைகள் அமைக்க வேண்டியும், உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசினர். மேலும் ” ஒன்றியத்தின் எந்த செயல்பாடுகளும் மறைமுகத்தன்மை இல்லாமல், வெளிப்படை தன்மையுடன் செயல்படும்.” என, ஒன்றிய பெருந்தலைவர் ரவி உறுதியளித்தார். கூட்டத்தில், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாலாஜி, ஒன்றிய துணை பெருந்தலைவர் தமிழ்செல்வி பூமிநாதன், கவுன்சிலர்கள் பானுபிரசாத், சுமித்ராகுமார், பிரவினா சங்கர்ராஜா, கதிரவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி அவர்கள் சார்பில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது…