November 27, 2020

ஆவடியில், மின் கட்டண உயர்வை கண்டிக்கும், ஆர்ப்பாட்டதிற்க்கு வலுசேர்க்க, பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம்…

1 min read
தமிழக அரசு, கடந்த சில மாதங்களாக மின் அளவீடு செய்யாமல், கடந்த மாதம் மின் அளவீடு செய்ததால், மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் பொது மக்கள் அதிக அளவில் பாதிப்பிற்க்கு உள்ளானார்கள். பலர் கோர்ட்டிற்க்கும் சென்று வழக்குகளும் தொடுத்தனர். இந்நிலையில், இந்த மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டணத்தை குறைக்க வேண்டியும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.
அதன்படி, மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, நாளை அனைத்து வீடுகளின் முன்பும் நடைபெற உள்ள கறுப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, வலிமை சேர்க்கும் விதத்தில், ஆவடி மாநகரத்தில் உள்ள திருமுல்லைவாயில் பஜார் வீதியில், உள்ள அனைத்து கடைகள் மற்றும் இல்லங்களுக்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், ஆவடி சா.மு.நாசர் நேரடியாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கினார். உடன் ஆவடி மாநகர செயலாளர் திரு. ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *