கும்மிடிப்பூண்டி அருகே வனப்பகுதியில், மர்மமான முறையில் திருமணமான பெண் கொலை, தலை நசுங்கி அழுகிய நிலையில் இருந்த சடலம், பாதிரிவேடு போலிசார் விசாரணை…
1 min readதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மதர்பாக்கம் ஒட்டிய இருங்குலம் வனப்பகுதியானது தமிழக எல்லையை ஒட்டி அமைந்த காட்டு பகுதியாகும். ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வனப்பகுதியின் குறுக்குவழி பாதையைப் பயன்படுத்தி, தமிழக எல்லையில் இருந்து ஆந்திராவிற்கும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும், வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது ஊரடங்கு என்பதால், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய மர்ம நபர்கள், ஆழ் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில், அடையாளம் தெரியாத பெண்ணை கல்லால் அடித்துக் கொன்று, முகத்தை சித்தைது போட்டுவிட்டு ஒடிபோய் உள்ளனர். அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் சடலத்தை, அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து, தகவல் அளித்த பேரில், அங்கு விரைந்து சென்ற பாதிரிவேடு காவல்துறையினர் மோப்ப நாய்களையும், தடயவியல் துறையினரையும் வரவழைத்து, உடற்கூறு ஆய்வு செய்த காவல்துறையினர், இறந்து கிடந்த பெண்ணை யார் கொன்றது, என வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி – செய்தியாளர், சீனிவாசன்
நிழல்.இன்- 8939476777