கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் பகுதியில், சட்டவிரோதமாக ஷேர் ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தல், இருவர் கைது…
1 min readகும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் பெரியகுப்பம் பகுதியில், சட்டவிரோதமாக ஷேர் ஆட்டோவில்
கடத்திவரப்பட்ட 50,000 ரூபாய் மதிப்பிலான 288 மதுபாட்டில்கள் பறிமுதல். இருவரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி
மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எளாவூர் சுண்ணாம்புகுளம் பகுதியில், மதுவிலக்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஷேர் ஆட்டோவில் 50,000 ரூபாய் மதிப்பிலான 288 மதுபாட்டில்களை கடத்தி வந்த ஆட்டோவை உதவிஆய்வாளர் புகழேந்தி, காவலர் நாகரஜன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
மது பாட்டில்களை கடத்தி வந்த பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த தீனா 20, சுரேஷ் 30 ஆகியோரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இந்த மது பாட்டில் கடத்தல் குறித்து வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777