திருவள்ளூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் வருபவருடைய மகள் ஹரிணி திருவள்ளுர் கலவல கண்ணன் பள்ளியில், 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பிற்க்கு நடத்தப்பட்ட அரசு பொதுத்தேர்வில், ஹரிணி தேர்வு எழுதியதில் 597 மதிப்பெண் பெற்றார். மாநில அளவில் ஹரிணி அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற நிலையில், அவரை இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பாபு அவர்களின் மூலமாக, மாணவி ஹரிணியை தொடர்பு கொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பேசினார். அதில், அவர் பேசுகையில் ஹரிணியின் மேற்படிப்பிற்கு ஏதும் உதவி தேவைப்பட்டால், தன்னை தொடர்பு கொண்டால், உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.