கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் அதிகமாகி வருவதால், தமிழக அரசு கோவில்களை திறக்க தடை விதிக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக அந்த தடை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்லவும், வழிபாடுகள் செய்யவும் தடை இருந்து வந்தது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்திலும், வரதராஜ பெருமாள் கோவில், திருத்தணி முருகர் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், உட்பட பல கோயில்கள் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆடி மாதம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருத்தணி முருகன் கோவில் ஆடி மாதம் விசேசமாக இருப்பது வழக்கம், ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அதனால் திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.அதேபோல் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலிலும், ஆடி மாதம் முழுவதும் 15 வாரங்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதனால் ஆடி மாதம் முழுவதும் பெரியபாளையம் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, இந்த கோயிலிலும், “ஆடிமாதம் முழுவதும் பக்தர்கள் யாரும் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு வரவேண்டாம். எனவும், திருவிழா நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது.” எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.