Thu. Sep 24th, 2020

பெரியபாளையத்தில், லாரியை மடக்கி வழிப்பறி செய்த 3 பேர் கைது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, லாரியை வழி மடக்கி ஓட்டுநரிடம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்தனர். கருணாகரன் என்பவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்தார். பெரியபாளையம் அருகே லாரி சென்ற போது முன்பக்க கண்ணாடியில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர். லாரி ஓட்டுநர் கருணாகரன் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்த போது, அங்கு மறைந்திருந்த 3பேர் கொண்ட கும்பல் திடீரென ஓடிவந்து, கத்தியை காட்டி மிரட்டி லாரி ஓட்டுநரிடம் இருந்த 6000ரூபாய் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து, கருணாகரன் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், சுரேஷ், பிரகாசம் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்கின்றனர்

கும்மிடிப்பூண்டி – செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *