தமிழக அரசு கொரானா தொற்றின் பிடியில் இருக்கும் மக்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் ஆவடியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆவடி மாநகர கழக செயலாளர் ஆவடி ஜி.ராஜேந்திரன், நகர அவைத் தலைவர் இரா.ருக்கு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.செங்குன்றம் பகுதியில், தலைமை பொதுகுழு உறுப்பினர் ஜெய்மதன் தலைமையில், கர்த்திக் கோட்டீஸ்வரன் உட்பட இளைஞர்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.