தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்யப்படும், என்று அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்ததன் பேரில், முன்னாள் அமைச்சரும் மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளருமான க.சுந்தரம் அவர்கள் மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டின் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், மின் கட்டணத்தை குறைத்திடவும், வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சமூக இடைவெளியுடன் திமுக நிர்வாகிகககள் க.சு.தமிழ்உதயன், மீஞ்சூர் பேரூர் கழக துணை செயலாளர் ஜோசப், ஒன்றிய பிரிதிநிதி, மா.திருப்பதி ப.அலெக்சாண்டர் முப்பராஜ்,தமிழரசு, முல்லை மாரி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்…