November 27, 2020

திருவள்ளுரில், ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற பேட்டரி வாகனம், கழிவுநீர் அகற்ற டிராக்டர்களை, அமைச்சர்கள் துவக்கிவைத்தனர்…

1 min read
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சார்பில், 6 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில், 275 பேட்டரியால் இயங்கும் குப்பை அள்ளும் வாகனங்களை, 121 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன், கும்மிடிபூண்டி எம்எல்ஏ விஜயகுமார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.
அதேபோல், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர், வேணுகோபால் அவர்களின் நிதியின் மூலம், இரண்டு கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு தலா 20 லட்சம் வீதம் 40 லட்சத்தில் வாகனங்கள், வழங்கப்பட்டது
அதேபோல் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 38 நபர்களுக்கு 22 லட்சத்து 45 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட டிராக்டரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் டிராக்டரை ஒட்டி பார்த்து பயனாளிகளுக்கு வாங்கினார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *