Thu. Sep 24th, 2020

திருவள்ளுரில், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை, எம்.எல்.ஏ வி.ஜே.ராஜேந்திரன் நேரில் சென்று வாழ்த்து…

1 min read
திருவள்ளூர் குளக்கரை வீதியில், வசித்து வருபவர் ராகவேந்திரர். இவர் திருவள்ளுரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். ராகவேந்திரன் – கிருஷ்ணவேணி இவர்களுடைய மகள் ஹரிணி திருவள்ளுர் கலவல கண்ணன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். ஹரிணி அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் (597/600) அதிக மதிப்பெண் பெற்று இருந்தார். அதை கேள்விபட்ட, திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் அவர்கள் மாணவியின் வீட்டிற்க்கு நேரில் சென்று, மாணவிக்கு பொன்னாடை போர்த்தி பரிசுத் தொகையினை வழங்கி வாழ்த்தினை தெரிவித்தார். அப்போது அவருடன் மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன் நகரச் செயலாளர் ரவிச்சந்திரன் ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன் காஞ்சி பாடி சரவணன் மற்றும் கழகத் தோழர்கள் பலர் சென்றிருந்தனர்…

செய்தியாளர் – மகேஷ்
நிழல் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *