November 27, 2020

தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில், பத்திரிகையாளர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி தரும், உணவு பொருகள் தொகுப்பு வழங்கபட்டது…

1 min read
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க திருவள்ளூர் மாவட்டம் சார்பாக, 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் 32 வகையான உணவுப் பொருள்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் எலைட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் முனைவர் என்.ராஜன் தலைமை தாங்கி உரையாற்றுகையில், பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் கொரோனா காலத்தில் தன்னலம் கருதாமல் தனது உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றி மக்கள் பிரச்னைகள், சமூக சார்ந்த செய்திகளை வழங்கி வருவதை சுட்டிக் காட்டி சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சங்கச் செயலாளர் முனைவர் மணிவண்ணன், பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் விக்டர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைப் பொருளாளர் பால் செபாஸ்டின் வரவேற்புரையாற்றுகையில், இன்றைய காலக்கட்டத்தில் இயற்கை வழங்கியுள்ள வெண்பூசணிக்காய், கத்தரிக்காய், கொத்தவராக்காய், புடலங்காய், அரசாணிக்காய், கோவக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், தேங்காய், எலுமிச்சை, வெண்டைக்காய், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை தனது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்ள வேண்டுமென்றும் கேட்டு
க் கொண்டார்.
இதில் முனைவர் கே.என். ரங்கநாதன், தேவராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். எலைட் பள்ளியின் துணை முதல்வர் பிரமோத், பீலிக்கான் ஆகியோர் நன்றி நவின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சங்க நிர்வாகிகளுடன் இணைந்து பத்திரிகையாளர்கள் ஆர்.முருககனி, நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் செய்திருந்தனர்.
செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள பத்திரிகையாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


செய்திகள் – நண்பன்
அபுபக்கர்
நிழல்.
இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *