திருவள்ளூர் மாவட்ட, திருவாலங்காடு ஒன்றியத்தில், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜே. ராஜேந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கூடல் வாடி, அம்பேத்கார் நகர், அண்ணா நகர், போன்ற பகுதிகளில் சிமென்ட் சாலை அமைத்து கொடுக்கபட்டுள்ளது. அப்பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. அதற்கான கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சியில், திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜே.ராஜேந்திரன் அவர்களும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், KVG உமாமகேஸ்வரி அவர்களும், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு அவர்களும், மாவட்ட கவுன்சிலர்கள் விஜயகுமாரி சரவணன் அவர்களும், சரஸ்வதி அவர்களும்,ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம் முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.