சென்னையில், முதன் முறையாக பிளாஸ்மா தானம் செய்வதற்கான தகுதி பரிசோதனை முகாம் நடத்தபட்டது.
1 min read

தமிழக அளவில் முதல் முதலாக, பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 2.34 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 30 நிமிடத்தில் 7 நபர்களிடமிருந்து தலா 500 மி.லி. பிளாஸ்மாவை கொடையாக பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.கோவிட் 19ல் இருந்து குணமடைந்த நோயாளிகள் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். இணை நோய்கள் உள்ளவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய கூடாது. பொதுமக்கள் எவ்வித பயமும் அச்சமும் இன்றி தாமாகவே முன்வந்து உயிரை காப்பாற்ற பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குமாறு, நலவாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் பிளாஸ்மா, சமூக பணிக்குழு அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையுடன் இணைந்து பிளாஸ்மா தானம் செய்வதற்கான தகுதி பரிசோதனை முகாம் எக்மோர் மலபார் முஸ்லிம் அசோசியேஷன் மஹாலில் இன்று நடைபெற்றது. கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்ட நபர்கள் முன்வந்து தகுதி பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நோயால் பாதித்த மக்களின் பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உண்டாக்க ஏற்கனவே நோய் தொற்றில் இருந்து குணமடைந்த மக்களிடம் இருந்து பெறப்படும் பிளாஸ்மா அவர்கள் உடலில் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான தேசிய மருத்துவ கழகத்தின் அனுமதி பெற்று தமிழகத்தில் அதற்கான சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் துவங்கப்பட்டுள்ளன.
ஆனால் மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. அந்த நிலையை மாற்ற வேண்டும் குணமடைந்த மக்கள் பிளாஸ்மா தானம் செய்ய தானாக முன்வந்து அரசுக்கும், நோயால் பாதிக்கப்பட்ட மக்களும் உதவிட வேண்டும் என்கிற நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவர் ஜியா தலைமையில் ஹமீத் மற்றும் சமீர் ஆகியோர் ஒருங்கினைப்பில் சமுக பணிக்குழு செய்திருந்தது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தொழிற்நுட்ப குழுவினர் வந்து ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்துல் உலமா பொது செயலாளர் அன்வர் பாதுஷா துவக்கி வைத்தார் .இதில் LIONS கிளப், UNWO , மற்றும் CRF போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிகள் பங்கேற்றனர்.
செய்திகள் – அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777
