November 27, 2020

சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பாக, 15 ஊராட்சிகளில் இளைஞர ணி அமைப்பாளர்கள் தேர்வு…

1 min read
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனைப்படி,
சோழவரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் 165 கிளைக் கழகங்களில் அந்தந்த கிளைக்களுக்கு நேரடியாக சென்று புதிய கிளைக்கழக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே. கர்ணாகரன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அப்போது அவருடன் இளைஞரணி அமைப்பாளர் என்.முகம்மது அலீ, துணை அமைப்பாளர்கள் ஜி.ஆர். பத்மநாபன், எம்.ஜெகன், ஆர்.குமரன், ஆர்.விமல்குமார், என்.விஜய் ஆகியோர் இருந்தனர்.

செய்திகள் – நண்பன் அபுபக்கர்;
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *