தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து, அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரவேண்டும் எனவும், அந்த நீர்நிலையின் மூலம் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பயன் அடையவும், குடிநீர் பிரட்சனைகள் தீர்க்கபட வேண்டும் எனவும், தமிழக அரசு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குடிமராமத்து பணிகளை பல நூறு கோடி செலவில் செய்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் 500 கோடி செலவில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது.இந் நிலையில், திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி ஏரியில் குடிமராமத்து பணி செய்ய பணி துவங்கபட்டது. ஆனால், அந்த பணியை மேற்கொண்ட நபர்கள், ஏரியின் கரையை உயர்த்தி பலப்படுத்துவதை விட்டு, விட்டு ஏரியின் கரையை பல இடங்களில் உடைத்து ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஏரியின் உள்ளே இருந்த மணல்களை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக செயல்பட்டு உள்ளனர். இதை அப்பகுதி பொது மக்கள் ஒன்றாக கூடி மணல் கொள்ளை அடிக்கபடிவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கேட்ட போது, அவர்களை வருவாய்த் துறையினரை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், “அரசு பணியை செய்யவிடாமல் தடுக்கிறீர்களா ” என கூறி, மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனால் மேலும் கொதிப்படைந்த மக்கள், ” இந்த ஏரியில் குடிமராமத்து பணி எந்த முறையில் செய்யபட வேண்டும். இந்த ஏரியில் இருந்து மணல்களை ஏன் வெளியில் கொண்டு செல்லபடுகிறது. இந்த பணி எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம், எவ்வளவு உயரத்திற்க்கு செய்யப்பட உள்ளது. இந்த ஏரியில் குடிமராமத்து பணி செய்ய அரசு ஒதுக்கீடு செய்யபட்டு உள்ள தொகை எவ்வளவு.” என்று பலவிதமான கேள்விகளை அடுக்கடுகாக கேட்க துவங்கினர். மேலும், ” இதுவரை நடந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த பின் தான், மீண்டும் பணி துவங்க வேண்டும்.” என்று மக்கள் திட மாக கூறினர்.அதனால் அங்கு வந்திருந்த அதிகாரிகள் மக்களின் எந்த கேள்விகளுக்கும் ஒழுங்காக பதில் அளிக்காத நிலையில், பொது மக்களின் இந்த திடீர் போராட்டதால், செய்வதறியாது, ” இந்த ஏரியில் குடிமராமத்து பணி செய்தவர்கள், மணல் கொள்ளையில் ஈடுபட்டதால், இந்த பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றோம்.” என்று கூறிவிட்டு, அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.