திருவள்ளூரில் உள்ள கலவல கண்ணன் பள்ளியில், பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஹரிணி, மாநில அளவில் (587/600) அதிக மதிப்பெண் பெற்றதால், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளரும், முன்னாள் திருவள்ளூர் நகர மன்றத் தலைவரும், சிலம்பாட்டக் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவருமான, கமாண்டோ,பாஸ்கரன் அவர்கள் மாணவியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அந்த மாணவியை வாழ்த்தி, பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பு பரிசையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.