November 27, 2020

மீஞ்சூர் ஒன்றியம், சிருளபாக்கம் ஊராட்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊட்டசத்து பொருட்கள் வழங்கபட்டது…

1 min read
மீஞ்சூர் ஒன்றியம், சிருளபாக்கம் ஊராட்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேஸ் அறக்கட்டளையின் சார்பில், ஊட்டசத்து பொருட்கள் வழங்கபட்டது. நிகழ்ச்சிக்கு சிறுளபாக்கம் ஊராட்சிமன்ற தலைவர், உஷா கணேசன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் நிஷாந்தி, லோகநாதன், உஷா, ரஜினி, மணிகண்டன், கருணாகரன், நாகம்மாள், அஞ்சலை ஆகியோர் முன்னிலை வலித்தனர். துணை தலைவர் அரசம்மாள் ரவி, அனைவரையும் வரவேற்றார். நிகழ்சியில் கலந்து கொண்ட மேலூர் ஊராடசிமன்ற தலைவர் வாசுகி நிலவழகன், பள்ளி பிள்ளைகளுக்கும், மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு ஊட்டசத்து பொருட்களையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி, கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் அறிவுரைகள் வழங்கி பேசினார். இந் நிகழ்ச்சியை பேஸ் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர், சாலமோன் செய்திருந்தார். இறுதியாக, ஊராட்சிமன்ற செயலாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.

நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *