August 5, 2020

இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…

காடு, மலைமேடுகள், நீர்நிலைகள், இவைகளெல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்கள், அவைகளை நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, என பலவிதங்களில் பிரித்து, பாதுகாத்து அதனை நம் வாழ்வாதாரமாக கொண்டு பயனடைந்து வருகிறோம். இந்த இயற்கை செல்வங்கள் எல்லாம் பலவிதமான இயற்கை சீற்றங்களுக்கு இடையே பாதிப்படைந்தாலும், மனித இனத்திற்கும், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு வாழ்வில் ஒரு அங்கமாகவும், பாதுகாப்பு அரணாகவும், இந்த இயற்க்கை வளங்கள் இருந்து வருகின்றன.
ஆனால், மனிதன் தொழில் வளர்ச்சி என்ற பெயரில், இப்போதெல்லாம் இயற்கை வளங்களை அழித்து, இயற்கைக்கு முரணான பெரிய பெரிய தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும், உருவாக்கி வருகின்றோம். இதே நிலைமை நீடித்தால் நம்முடைய இயற்கை வளங்கள் அழிந்து போகும் சூழல் உருவாகும் என்பதின் ஆபத்தை உணர்ந்து தான், நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளும் விதமாக, சில சட்ட திட்டங்களை வகுத்து இருக்கிறோம். அதில் ஒரு சிறிய முயற்சியின் விளவு தான், நமது மத்திய அரசு 1986 ஆம் ஆண்டு, “சூழியல் தாக்க மதிப்பீடு” என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. இதனுடைய வேலை என்னவென்றால், இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள், அணைக்கட்டுகள், போன்றவைகள் உருவாக்கப்படும் போது இயற்கை வளங்களை அழித்து விடாமல் பாதுகாக்கக்கூடிய, ஒரு அமைப்பு தான் இது.
இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே 1986, மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் இந்த அமைப்பில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படன. அதன்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் தரப்பிலிருந்து இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களுடைய பரிந்துரையின்படி, நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், அமைக்கப்படும். என முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே நம் நாடு முழுவதும் கல்குவாரிகளும், கரி சுரங்கங்களும், நீர்நிலைகளும், களவாடப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட விதிமீறல்கள் நடக்கும் நிலையில், இந்த அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று, சூழியல் பாதுகாப்பாளர்களும், பொதுமக்களும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது “EIA 2020” திட்ட வரைவு அவசர, அவசரமாக நிறைவேற்ற வேண்டி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த EIA 2020 திட்ட வரைவை, மத்திய அரசு மார்ச் மாதம் அறிவித்தது. அன்று முதல் உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் உள்ள சூழ்நிலையில், ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும், என முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு நீதிமன்றம் தலையிட்டு அவசரகதியில் இந்த திட்ட வரைவை நிறைவேற்ற வேண்டாம் எனவும், கொரோனா தொற்று பரவல் காலத்தில் கருத்து கேட்பு காலஅளவு நீட்டித்து, இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், நிபுணர் குழுவினர், என அனைவருடைய கருத்துகளையும் கேட்ட பிறகு, இந்த திட்ட வரைவை நிறைவு செய்ய வேண்டும், என அறிவித்தது. அதன்படி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை திட்ட வரைவின் கருத்துக்கேட்பு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்து கேட்பு என்பதெல்லாம் ஒரு கண்துடைப்பு தான் என்பது உலகறிந்த உண்மை இப்போது உள்ள EIA அமைப்பின் சட்ட திட்டங்கள்படி பார்த்தாலே, இன்றுவரை நம்மால் எந்த இயற்கை வளங்களையும் பாதுகாக்க முடியவில்லை. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் உள்ள ஓட்டைகளின் வழியாக, பல விதங்களில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு தான் வருகின்றன. அப்படி உள்ள சூழ்நிலையில், இந்த EIA 2020 திட்டவரைவு நிறைவேற்றப்பட்டால்
கார்ப்பரேட் கம்பெனிகளும், பெரிய பெரிய நிறுவனங்களும், நம் நாட்டில் உள்ள இயற்க்கை வளங்களை அழிக்க நாமே சிவப்பு கம்பளம் விரித்தது போல் ஆகிவிடும்.
காரணம் என்னவென்றால், EAI 2020 யில், தற்போது EIA வில் உள்ள கட்டுபாடுகள் எதுவும் கடினமாக இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும், எளிமையாக இயற்க்கை வளங்களை அழிக்கும் வகையில், கட்டுபாடுகளில் தளர்வுகள் உள்ளது தான் கொடுமை. உதாரணமாக, 1.தற்ப்போது இந்த அமைப்பில், புதிய தொழிற்சாலைகள் அமைக்க ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் இரண்டு குழுவும் இல்லாமல் செய்தது.
புதிய தொழிற்சாலைகளை அமைக்க பொதுமக்கள் கருத்துகள் இனி கேட்கபட வேண்டியதில்லை. என்பது,
3.தற்பொழுது, நிறுவனங்கள் 6 மாதத்திற்க்கு ஒரு முறை, அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்பது, ஆண்டிற்க்கு ஒரு முறை சமர்பித்தால் போதும், எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டும் இல்லாமல், இப்படி பல கட்டுபாடு தளர்வுகளை இந்த அமைப்பு நடைமுறைபடுத்த உள்ளது, என்பது தான் நமக்க
அதிர்ச்சியாக உள்ளது.
மக்கள் உறங்கி கொண்டு இருந்தாலும், அவர்களை பாதுகாக்க அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது தான் ஜனநாயக மாண்பு, ஆனால் இனி மக்களை விசவாயு தெளித்து கொன்றுவிட்டு அவர்களை புதைத்த இடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகள் அமைக்க இந்த மத்திய அரசு அனுமதி கொடுக்கும் நிலவரம் வரும் போல் உள்ளது.
இன்றைய நிலையில், “மக்களை ஓட்டு போட வேண்டும் என்பதற்காக மட்டும் தான், இன்று வரை உயிருடன் விட்டு வைத்திருக்கிறார்களோ..”என நினைக்க தோன்றுகிறது.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 893947677