Mon. Sep 28th, 2020

சோழவரம் ஒன்றியம், பவானி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமாரா பொறுத்தும் பணி துவக்கவிழா…

1 min read
பவானிநகர் சுற்றுவட்டார சமூக பாதுகாப்புக் குழு சார்பாக பவானி நகரில், (50 CCTV) கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த (Hik Vision 4 MP) தூண்கள் அடிக்கல் நாட்டு விழா பவானி நகர் நுழைவாயில், பவானி அம்மன் கோயில், வக்ரகாளியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, குழு தலைவர் எஸ்.ஜோசப் தலைமையில் செயலாளர் பி.என்.கே. கிருஷ்ணன், பொருளாளர் பி. சேகர்
முன்னிலை வகித்தனர்.
சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மீ.வே. கர்ணாகரன், மாவட்டக் கவுன்சிலர் கீதா அரசு, ஒன்றியக் கவுன்சிலர் கா.மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கேமரா தூணை அடிக்கல் நாட்டி வைத்தும், மரக்கன்றுகளை நட்டு வைத்தும் துவக்கி வைத்தனர். இதில் குழு நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்திகள் – நண்பன், அபுபக்கர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *