Fri. Oct 23rd, 2020

திருவேலங்காடு அருகே, காதலித்தவர் ஏமாற்றியதால், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை, இயக்குனர் ரஞ்சித் போலிசாருக்கு கண்டனம்…

1 min read

திருவாலங்காடு ஒன்றியம், நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை, (வயது19) இவர், திருத்தணியில் உள்ள ஆங்கில மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, இவரும், தாழவேடு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் மகன் ராஜ்குமார்,(வயது 23) என்பவரும், பழக்கம் ஏற்ப்பட்டு நாளைடைவில் அது காதலாக மாறியுள்ளது. அதன் பின்னர் இருவரும் யாருக்கும் தெரியாமல் பேசி, பழகி வந்துள்ளனர். நாம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளலாம், என்று மணிமேகலைக்கு ஆசைவார்த்தை கூறி, நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த ராஜ்குமார், திடீரென திருமணத்திற்கு மறுத்துள்ளார். இந்நிலையில், மீண்டும், சம்பவத்திற்க்கு முன் தினம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, ராஜ்குமாரை, மணிமேகலை நேரில் சந்தித்து கெஞ்சியும்,
ராஜ்குமார் மறுப்பு தெரிவித்ததால், அதிர்ச்சியில் மனமுடைந்த மணிமேகலை, நல்லாட்டூர் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றுக்கு சென்று, தனது உடல் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் கருகி மணிமேகலை சம்பவ இடத்திலேயே இறந்து போனார். தகவல் அறிந்து அங்கு வந்த கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *