November 27, 2020

மீஞ்சூர் ஒன்றியத்தில், 6 மாதமாக ஊதியம் வழங்காததால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மார் பாளையம், பெரும்பேடு, கோளூர், காணியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், துப்புரவு களப்பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு கடந்த ஆறு மாத காலமாக சம்பளம் வழங்கப்படாததால் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து மீஞ்சூர் ஊராட்சி குழு பெருந்தலைவர் ரவி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ” உலகமே கொரோனா தொற்று பரவலுக்கு அஞ்சியும், அரசு ஊரடங்கு அறிவித்ததை ஏற்றும் அனைத்து மக்களும் வீட்டின் உள் அடைந்து கிடக்கும் நிலையில், நாங்கள் எங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா எதிர்த்து களத்தில் பணியாற்றி கொண்டு இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு 6 மாதங்களாக தரவேண்டிய ஊதியத்தை வழங்காதது எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும் ” என கூறி முறையிட்டனர்.
பின்னர், ஒன்றிய குழு தலைவரும், வட்டார வளர்ச்சி அலுவலரும், ” ஒரு வார காலத்தில் சம்பள பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு முயற்சி எடுப்பதாக உறுதி அளித்ததனர். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

செய்திகள் – தனசேகர்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *