Wed. Oct 28th, 2020

திருத்தணி நகராட்சிக்கு குடிநீர் திட்ட பணிகளை, காணொளி காட்சி மூலம், முதல்வர் துவக்கி வைத்தார்…

1 min read
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியின் நீண்ட கால குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட வேண்டி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் அவர்கள் சட்டமன்றத்தில் பேசியும், முதல்வருக்கு கோரிக்கை வைத்ததையும் தொடர்ந்து, திருத்தணியில் குடிநீர் பிரட்சனையை தீர்க்க திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்காக
109.68 கோடி
யினை நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இத் இத்திட்ட பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் திருத்தணி நகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை முழுமையாக போக்கிட, பாலாறு ஆற்றின் திருபாற்கடல் பகுதியில் நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, அதிலிருந்து பெறப்படும் நீரினை திருத்தணி நகராட்சியில் தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி மூலம் சேகரிக்கவும், 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தும், சுமார் 86,000 மக்கள் பயன்பெறும் வகையில் 86 கிலோ மீட்டர் தொலைவிற்கு பகிர்மான குழாய்கள் அமைத்து, ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டு இணைப்பு வழங்கும், திருத்தணி குடிநீர் அபிவிருத்தி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். மேலும், இந்நிகழ்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் கு.பாபு, செயற்பொறியாளர் க.வேல்முருகன், திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் த.சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – மகேஷ் & நவீன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *