August 5, 2020

திருவள்ளுர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு திமுக வினர் உதவி…

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் மிக வேகமாக உள்ள நிலையில், மாவட்ட அளவில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டி, திருவள்ளூர் திருத்தணி பொன்னேரி அரசு மருத்துவமனைகளிலும்,
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் அங்கு மட்டும் இல்லாமல் தனியார் கல்லூரிகளிலும் தங்க வைக்கபட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவ வேண்டி, திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் நாசர், மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று, தலைமை மருத்துவரை சந்தித்து, தாங்கள் கொண்டு வந்த 1/2 டன் அரிசி, பருப்புகள், நெய், எண்ணை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். அப்போது திருவள்ளுர் நகர செயலாளர் ரவிசந்திரன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர். மேலும், திருவள்ளுர் நகர திமுக சார்பில் இது போல் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும். எனவும், வாரம் ஒரு முறை அனைவருக்கும் பிரியாணி வழங்கப்படும். எனவும் உறுதியளித்து விட்டு சென்றனர்.

செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777