August 5, 2020

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வீரராகவர் கோயில் அர்ச்சர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவர் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட செயலாளருமான சிறுணியம் பலராமன் சார்பில், அவரது மகள் மகாலட்சுமி கோயிலில் உள்ள 120 அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை மற்றும் 500 ரூபாய்‌ பணம்‌ உள்ளிட்ட மளிகைப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார். அப்போது திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், அதிமுக நிர்வாகிகள் கிரண்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்திகள் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777