Wed. Oct 28th, 2020

பெரியபாளையம் அருகே, பொது மக்கள் சேதமடைந்த நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு, வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை…

1 min read
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, அரியப்பாக்கம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. பலத்த சேதமடைந்த நிலையில் உள்ள அந்த கடையின் உள்ளே வைக்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மழையில் நனைந்து புழுத்து போவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தங்களது கிராமத்தின் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் கிடப்பில் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மழைக் காலங்களில் வினியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால் பொருட்களை நியாய விலைக் கடை ஊழியர்களிடமே திரும்ப அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராம நியாய விலைக் கடையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

செய்திகள் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *