August 5, 2020

மீஞ்சூர் ஒன்றியத்தில், வீடுகள் இல்லாத பகுதிக்கு, சாலை போடும் ஊராட்சி நிர்வாகம், மக்கள் எதிர்ப்பு…

மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள, தேவதானம் ஊராட்சியில் தேவதானம், கவரைபாளையம், அண்ணாநகர், தெலுங்கு காலனி, சிருளப்பாக்கம், போன்ற பகுதிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் சமீபத்தில் நடந்த ஊராட்சிமன்ற கூட்டத்தில், குடிநீர், தெரு விளக்குகள் பராமரித்தல், சாலை பணிகள் உள்ளிட்ட பல பணிகள் செய்யவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது துணை தலைவராக இருக்கும் ரவி என்பவர், “எங்கள் கவரப்பாளையம் பகுதி தெருசாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. ஆகவே அந்த சாலை சீரமைக்க வேண்டும்” என கூறியதை தொடர்ந்து, அந்த சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த சாலையை சீரமைக்காமல் அந்த குடியிருப்பு பகுதியை கடந்து, ஆட்கள் பயன்படுத்தாத, காலை கடன் கழிக்க செல்வதற்க்கு கூட யாரும் பயன்படுத்தாத சாலையில், பணியை துவக்கினர்.
உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபுவை சந்தித்து முறையிட்டனர். அதை தொடர்ந்து அவர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு சென்றுள்ளார். இது குறித்து, நாம் அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, ” ஊர் உள்ளே இருக்கும் சாலை மோசமான நிலையில் உள்ள போது, ஆட்கள் நடமாட்டல் இல்லாத பகுதிக்கு சாலை போடுவது தவறு தான், ஆனால் ஊரின் உள்ளே தார் சாலை தான் போட வேண்டும். ஆனால் இப்போது போடுவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கருங்கல் சாலை தான் அமைக்கபட உள்ளது. இந்த சாலையை அந்த இடத்தில் போட முடியாது, அடுத்து தார்சாலை போடும் போது அங்கு சாலை போட்டு தரப்படும் என நான் நேரடியாக ஆய்வு செய்ய கவரப்பாளையம் பகுதிக்கு சென்ற போது அப்பகுதி மக்களிடம் உறுதியளித்து விட்டு வந்திருக்கிறேன் ” என்று கூறினார்.
எந்த ஊராட்சி நிர்வாகமாக இருந்தாலும், மக்கள் அதிகம் நடமாடும், அதிகம் சேதம் அடைந்த ஊரின் உள் இருக்கும் சாலையை போடாமல்
ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் நன்றாக இருக்கும் சாலையை போடுவற்க்கு அதிகாரிகள் எப்படி சம்மதிகிறார்கள் என்பது தான், நமது கேள்வியாக உள்ளது.

நிழல்.இன் – 8939476777